ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
இந்த சரித்திரபூர்வ பயணத்தின் போது, பாகிஸ்தான் உடன் இருதரப்பு விவாதங்கள் எதுவும் இடம்பெறாது என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
முன்னதாக பாகிஸ்தானுக்கு பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சர் மறைந்த பாஜக தலைவர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் தான்.
“இந்தப் பயணம் பலதரப்பு நிகழ்வுக்காக இருக்கும். நான் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளைப் பற்றி விவாதிக்க அங்கு செல்லவில்லை,” என்று அவர் கூறினார்.