47 நாடுகளுக்கு விசா விலக்கு கொள்கையைச் சீனா மேற்கொள்தல்

Estimated read time 0 min read

ஜூன் 9ஆம் நாள் முதல் சௌதி அரேபியா, ஓமான், குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சீனா விசா விலக்கு கொள்கையை சோதனை முறையில் மேற்கொள்ளத் துவங்கியது. இதுவரை, விசா விலக்கு கொள்கை மூலம் சீனாவுக்கு வரக் கூடிய நாடுகளின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள் முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் நாள் வரை, சௌதி அரேபியா, ஓமான், குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு 30நாட்களுக்குள் தங்கி சுற்றுலா மேற்கொள்ளுதல், வணிகம் புரிதல், நண்பர்களைச் சந்தித்தல், பரிமாற்றம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபட முடியும்.

எல்லை நுழைவுக் கொள்கையைச் சீனா தொடர்ந்து மேம்படுத்தி விசா விலக்கு நாடுகளின் பட்டியலை மேலும் விரிவாக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author