3வது ஐ.நா கடல் மாநாடு ஜுன் 9ம் நாள் முதல் 13ம் நாள் வரை, பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பன்னாட்டு அரசுகள், அரசு சாரா அமைப்புகள், கல்வியல் நிறுவனங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் முதலியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கெடுத்து, கடல் துறையின் தொடர் வல்ல வளர்ச்சி இலக்குகளையும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் கூட்டாக மதிப்பீடு செய்கின்றனர். இதன் காலக்கட்டத்தில் 10 முழு அமர்வும், கடல் நடவடிக்கை தொடர்பான 10 சிறப்பு கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன.
கடல் பல்லுயிர் பாதுகாப்பு, மீன்பிடிப்பு மானியம், “3030”என்ற இலக்கு ஆகிய 3 அம்சங்களின் முன்னேற்றங்கள், முக்கியமாக விவாதிக்கப்படும். “3030”என்பது, 2030ம் ஆண்டு வரை குறைந்தபட்சம் உலகின் 30 விழுக்காட்டு நிலப்பகுதி மற்றும் கடல் பரப்பு பாதுகாப்புக்குள் சேர்க்கப்படுவது என்ற குறிக்கோளாகும்.
