”7 நாளுக்குள்ள அறிக்கை வேணும்” தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு…. சூடாகும் கோவை சிறுமி விவகாரம்….!! 

Estimated read time 1 min read

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தற்போது கையில் எடுத்துள்ளது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த அராஜகச் சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து (Suo Motu) விசாரணையைத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக, அடுத்த 7 நாட்களுக்குள் முழுமையான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொடூரமான முறையில் தனது மகளைப் பறிகொடுத்துவிட்டு நிலைகுலைந்து போயிருக்கும் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை (Counseling) உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இச்சம்பவத்தில் சட்டத்திற்குட்பட்டு குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான மற்றும் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.

You May Also Like

More From Author