சவுதி அரேபியா, ஹஜ் கால வருகைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை, சுற்றுலா, குடும்ப வருகை, மற்றும் e-விசாக்கள் உள்ளிட்ட சில விசா வகைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்த தடை கடந்த மாதம் துவங்கப்பட்டதாகவும், இம்மாத இறுதிவரை நடைமுறையில் இருக்கேமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஹஜ் பருவத்தில் அதிகமான கூட்ட நெரிசல் ஏற்படுவதால், மற்ற வகை விசாக்களை பயன்படுத்தி வரும் பயணிகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஹஜ் காலத்தில், சிலர் சுற்றுலா/ குடும்ப விசா வாயிலாக சவுதிக்கு சென்று, சட்டவிரோதமாக ஹஜ் பணிகளில் ஈடுபட்டதையடுத்து, இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சவுதி, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை மற்றும் சுற்றுலா விசாக்களை நிறுத்தியுள்ளது
