பெய்ஜிங் நேரப்படி டிசம்பர் 3ஆம் நாள், ஐ.நாவின் 79ஆவது பொது பேரவையின் முழு அமர்வில், சர்வதேச பாதுகாப்புத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை அமைதியாக பயன்படுத்துவதை விரைவுபடுத்துவது என்ற சீனா சமர்ப்பித்த தீர்மானம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 3ஆம் நாள் கூறுகையில், ஐ.நா பொது பேரவையில் இத்தீர்மானம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு சீனா வரவேற்பு தெரிவிக்கிறது.
ஐ.நாவின் பங்கினை வலுபடுத்தி, பன்னாடுகள் சமமாக பங்கெடுக்கும் அடிப்படையில், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, வழிகாட்டு கோட்பாட்டை வகுத்து, மிக பல வளரும் நாடுகள் அமைதியான முறையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ உரிமையைப் பேணிக்காக்க வேண்டும் என்று இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இத்தீர்மானத்தை பன்முகங்களிலும் பயனுள்ள முறையிலும் செயல்படுத்துவதை முன்னேற்றி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சாதனைகள், மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி இலட்சியத்துக்கு நன்மை பயப்பதை விரைவுபடுத்த சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.