4ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு போட்டியின் பரிசளிப்பு விழாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடரவல்ல வளர்ச்சி ஆண்டு என்ற பரிமாற்ற நிகழ்ச்சியின் துவக்க விழாவும் 9ஆம் நாள் சீனாவின் ஷான்தூங் மாநிலத்தின் சிங்தாவ் நகரில் நடைபெற்றது.
8நாடுகளைச் சேர்ந்த 12 சிறந்த திட்டங்கள் முனைப்புடன் காணப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு முதலாவது பரிசு, 2 இரண்டாவது பரிசுகள், 3 மூன்றாவது பரிசுகள் மற்றும் 6 சிறந்த பரிசுகள் அடங்கியுள்ளன.
சீனாவின் ஸ்மார்ட் விமான நிலையத்தின் முக்கிய ஆளில்லா தொழில்நுட்பம் மற்றும் முன்மாதிரித் திட்டம் முதல் பரிசை வென்றுள்ளது.
இத்திட்டம், ரேடார்-காணொளி நுண்மதி புலனாய்வு உள்ளிட்ட தொழில்நுட்பம் மூலம் ஆளில்லா வாகனம் மற்றும் விண்கலத்துடனான அதிக துல்லியமான ஒருங்கிணைப்பை நனவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.