நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானத் தயாரிப்பில் சீனாவின் பெரிய முன்னேற்றம்

Estimated read time 1 min read

சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானம் ஏ.ஜி.600 குவேன்லோங் 11ஆம் நாள் சீனப் பயணியர் விமானப் பணியகத்திலிருந்து தயாரிப்புக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. இவ்விமானம் பெருமளவிலான தயாரிப்புக்கான கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளதை இது காட்டியுள்ளது. 

தற்போது, நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி தயாரிப்பு, உத்தரவாத சேவை அமைப்பு முறை ஆகியவற்றுக்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைத் திறனைச் சீனா கொண்டுள்ளது.

சிறப்புப் பயன்பாட்டுக்கான பெரிய ரக விமானத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய முன்னேற்றத்தைச் சீனப் பயணியர் விமானத் தொழில் நனவாக்கியுள்ளது.

 

You May Also Like

More From Author