ஐப்பசி விசாகம் – ஶ்ரீ நம்மாழ்வார் மாத திருநட்சத்திரம்

வந்தவாசி, நவ 04:

பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் திருநட்சத்ரமான விசாகத்தை முன்னிட்டு வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ நம்மாழ்வாருக்கு ஶ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

மேலும் மூல மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

You May Also Like

More From Author