தாய்.

Estimated read time 0 min read

Web team

hgvlp_277876.jpg

தாய் ! கவிஞர் இரா .இரவி !

தன்னலம் கருதாது சேய் நலம் கருதும்

தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்

தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்

தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்

தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்

முடியும் மெய்யான மெய் தாய்

எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை

இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்

உடலில் உயிர் உள்ளவரை என்றும்

ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்

மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்

மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை

மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை

தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்

உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்

ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே

உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author