சீன வணிகத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக பிரதிநிதியும், இவ்வமைச்சகத்தின் துணை அமைச்சருமான லீ செங்காங், இலண்டன் மாநகரில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக கலந்தாலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களுக்குத் தொடர்புடைய தகவல்களை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்,
கடந்த 2 நாட்களில், சீனாவும் அமெரிக்காவும் நிபுணத்துவமான, பகுத்தறிவான, ஆழமான, மனம் திறந்த முறையில் பரிமாறி கொண்டன. இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஜூன் 5ஆம் நாள் தொலை பேசி மூலம் எட்ட ஒத்த கருத்துக்கள் மற்றும் ஜெனீவாவில் எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்துக்களுக்கான கட்டுகோப்புகள் குறித்து இரு தரப்பும் அடிப்படையில் இசைந்து செயல்பட முன் வந்துள்ளன. இப்பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள், இரு தரப்புகளுக்கிடையே நம்பிக்கையை வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் நிதானமான, சீரான வளர்ச்சியை தூண்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
