சீன ஊடக குழுமம், சோங்சிங் மாநகர அரசு ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், 5ஆவது சிஎம்ஜி மன்றக் கூட்டம் ஜூன் 10ஆம் நாள் சோங்சிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறை தலைவருமான லீ ஷுலெய் காணொளி வழியில் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சில நாடுகளின் அரசு வாரியங்கள், சர்வதேச அமைப்புகள், ஊடக நிறுவனங்கள், சிந்தனை கிடங்குகள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முதலாவது சிஎம்ஜி மன்றக் கூட்டத்துக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் வழிகாட்டலின் கீழ், இம்மன்றக் கூட்டம் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் பரிமாற்றத்தை ஆழப்படுத்தி ஒன்றை ஒன்று கற்றுக் கொள்வதற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது என்றும், சீனா மேற்கொண்டு வரும் ஏஐ ப்ளஸ் நடவடிக்கை, சீனா மற்றும் உலகின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்புக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊடக கட்டமைப்பு மற்றும் சூழலுக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏஐ பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, புத்தாக்க வளர்ச்சியில் ஊடக உருவ மாற்றத்தையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும், உலகளாவிய நாகரிக முன்மொழிவை செயல்படுத்தி, இணையவழி நாகரிக பரிமாற்ற தளத்தை கட்டமைத்து, மக்களின் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
