இலண்டனில் சீனாவும் அமெரிக்காவும் மனம் திறந்து விரிவாக உரையாடியதையடுத்து, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வின் எதிர்காலம் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்து கணிப்பின்படி, அமெரிக்கா சீனாவுடன் இணைந்து செயல்பட்டு, இந்த கலந்துரையாடலின் போது எடப்பட்டுள்ள ஒத்தக் கருத்துக்களை நன்றாக செயல்படுத்த வேண்டும் என்று இக்கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
உலகளாவிய மிகப் பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா மற்றும் வளரும் நாடான சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெற்று வருகின்றன. 71 விழுக்காட்டினர் இதை ஒப்புக்கொண்டனர். மேலும், சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, தத்தமது வளர்ச்சிக்குத் துணைப் புரியும் அதேவேளையில், உலக தொழில் சங்கிலியின் நிலைத்தன்மைக்கும் முக்கிய உத்தரவாதம் அளிக்கும் என்று 85.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தவிரவும், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு முக்கிய பங்காற்றும் என்று 87.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்பு ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு, ரஷியா உள்ளிட்ட 5 மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 5130 பேர் இதில் கலந்து கொண்டனர்.