சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, கடந்த வாரத்தின் இறுதியில் ஆபிரிக்காவில் பயணம் மேற்கொண்டார். ஆபிரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தின.
இது குறித்து 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கோ ச்சியா குங் கூறுகையில்,வாங் யீயின் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இரு தரப்பின் நட்புறவை வலுப்படுத்தி, கையோடு கைகோர்த்து, நூற்றாண்டு கால நிலைமையைச் சமாளிக்கும் மன உறுதியை இது வெளிப்படுத்தியது.
ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி வருவதாக பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர். அவர்களும் சீனாவின் சீ சாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். சீன-ஆபிரிக்க உறவு உலக பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்கும் முன்மாதிரியாக திகழும் என்றார்.