மெக்சிகோ நாட்டின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளாடியா ஷீன்பாம் பார்டோ அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 4ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில், மெக்சிகோ, லத்தின் அமெரிக்கப் பிரதேசத்தின் பெரிய நாடாகவும், புதிதாக வளரும் முக்கிய நாடாகவும் திகழ்கிறது. சீனாவும் மெக்சிகோவும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். சீன-மெக்சிகோ உறவின் வளர்ச்சிக்கு நான் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன்.
அரசுத் தலைவர் ஷீன்பாமுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைப்பதற்கு வழிகாட்டி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் செவ்வனே நன்மை புரிய விரும்புவதாக தெரிவித்தார்.