சீனத் தேசிய இளைஞர் சம்மேளனத்தின் 14ஆவது கமிட்டியின் முழு அமர்வும், சீனத் தேசிய மாணவர்கள் சம்மேளனத்தின் 28ஆவது பிரதிநிதிகள் கூட்டமும் 2ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், இதற்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், சீனா முழுவதிலும் உள்ள பல்வேறு இனங்கள் மற்றும் துறைகளின் இளைஞர்கள், இளம் மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் சீன இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வாழ்த்து செய்தியில் கூறுகையில்,
கட்சியின் பல்வேறு அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் இளம் மாணவர்கள் நலமாக வளர்ந்து, சாதனையைப் படைப்பதற்கு நல்ல நிபந்தனைகளை உருவாக்க வேண்டும்.
சீனத் தேசிய இளைஞர் சம்மேளம், சீனத் தேசிய மாணவர்கள் சம்மேளனமும் சரியான அரசியல் திசையை உறுதியாகப் பின்பற்றி, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை ஆழமாக்கி, இளைஞர்கள் மற்றும் இளம் மாணவர்களுக்கு வழிகாட்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், புதிய யுகத்தில் மேலும் புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றார்.