டிசம்பர் 28ஆம் நாள் வரை, சீனாவின் 2026ஆம் புத்தாண்டுக்கான திரைப்பட வசூல் 500 கோடி யுவானைத் தாண்டி, கடந்த 8 ஆண்டுகளில் மிக உயர்வான பதிவை எட்டியுள்ளது.
தற்போது வரை 2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த திரைப்பட வசூல் 5150 கோடி யுவானாகும். சீனாவால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் வசூல் வகித்த விகிதம் 80 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டின் கடைசி காலத்தில் இவ்விகிதம் சுமார் 90 விழுக்காடாகும். சீனாவின் திரைப்படம், சீனாவில் நிகழ்ந்த கதைகளில் கவனம் செலுத்தி, பொது மக்களின் உணர்வுக்கு பொருந்தியது. இவை எல்லாம், இந்த சாதனைகளின் காரணங்களாகும்.
இவ்வாண்டில், சீன தேசிய திரைப்பட பணியகமும், தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, சீனத் திரைப்பட நுகர்வுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்வது, உணவுகளை ருசிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன.
