வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் சு லின் மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் தலைவர் லியாங் கியாங் ஆகியோரின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசு தலைவருமான ஷிச்சின்பிங் ஏப்ரல் 14 மற்றும் 15ஆம் நாட்களில் வியட்நாமில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார்.
அதனைப் போன்றே, மலேசியாவின் உச்ச தலைவர் இப்ராஹிம் மற்றும் கம்போடியா மன்னர் சிஹாமோனியின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 15ஆம் முதல் 18ஆம் நாள் வரை மலேசியா மற்றும் கம்போடியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.