சாட்ஜிபிடியை பயன்படுத்துவதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைவதாக ஆய்வில் தகவல்  

Estimated read time 0 min read

அமெரிக்காவின் எம்ஐடி, வெல்லஸ்லி கல்லூரி மற்றும் மாஸ் ஆர்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் எழுதும் திறனை மேம்படுத்தினாலும், அவை மூளை ஈடுபாடு, நினைவாற்றல் தக்கவைப்பு மற்றும் வேலையுடனான தனிப்பட்ட தொடர்பை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
“சாட்ஜிபிடியில் உங்கள் மூளை: கட்டுரை எழுதும் பணிக்கு ஏஐ உதவியாளரைப் பயன்படுத்தும்போது அறிவாற்றல் கடனை குவித்தல்”* என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஜூன் 10, 2025 அன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வில் 54 பல்கலைக்கழக மாணவர்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துதல், பாரம்பரிய இன்டர்நெட் தேடல் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் எந்த டிஜிட்டல் உதவியும் இல்லாமல் வேலை செய்தல் என மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

You May Also Like

More From Author