இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு வரலாற்று மைல்கல்லை அடையத் தயாராகி வருகிறது.
அதாவது, வரும் மாதங்களில் இந்திய ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வை இந்தியாவின் விண்வெளித் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சல் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் விவரித்தார்.
இது தொழில்நுட்ப இறக்குமதியாளர் என்ற இடத்திலிருந்து நம்பகமான உலகளாவிய ஏவுகணை கூட்டாளியாக நாடு மாறியதை பிரதிபலிக்கிறது.
இஸ்ரோவின் ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்த வி.நாராயணன், விண்வெளித் திட்டம் 1963 ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு சிறிய ராக்கெட்டை நன்கொடையாக வழங்கியபோது தொடங்கியது என்றார்.
அமெரிக்காவின் 6,500 கிலோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
