25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் சூரியனை விட அதிக ஜெர்மானியம்  

ஒரு புதிய கண்டுபிடிப்பில், இந்திய வானியலாளர்கள் 25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஓபியுச்சஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள A980 என்ற அரிய நட்சத்திரத்தில் ஜெர்மானியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு, நட்சத்திர அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் தற்போதைய கோட்பாடுகளை சவால் செய்யும் ஒரு எக்ஸ்ட்ரீம் ஹீலியம் (EHe) நட்சத்திரத்தில் ஜெர்மானியத்தின் இருப்பை முதன்முதலில் கண்டறிந்துள்ளதைக் குறிக்கிறது.
லடாக்கில் உள்ள இமயமலை சந்திரா தொலைநோக்கியில் உள்ள ஹான்லே எச்செல் ஸ்பெக்ட்ரோகிராஃப்பைப் பயன்படுத்தி இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆரம்பத்தில் ஹைட்ரஜன் குறைபாடுள்ள கார்பன் நட்சத்திரம் என்று நம்பப்பட்ட A980, அதில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், அது ஒரு குளிர் EHe நட்சத்திரம் என கண்டறியப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author