அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் பில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் பெற்றிருப்பார்கள் என மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கணித்துள்ளார்.
நிறுவனத்தின் காலாண்டு வருவாய் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த AI முகவர்கள் பயனர்களின் இலக்குகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நாள் முழுவதும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகச் செயல்படும் திறன் கொண்டவையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக, பணம் மற்றும் நிதி மேலாண்மை, உடல்நலம், தனிப்பட்ட உறவுகள் மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற முக்கியமான துறைகளில் மக்களுக்கு இந்த AI அமைப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் மக்கள் பல AI முகவர்களுடன் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ளத் தொடங்கும்போது, வாட்ஸ்அப் உள்ளிட்ட மெட்டாவின் செய்திப் பரிமாற்றத் தளங்கள் மிக முக்கியப் பங்கை வகிக்கும் என்றும் அவர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.
BREAKING: Zuckerberg just described the near-future of computing, and it has nothing to do with screens.
His call: within 5 years, every person on Earth has a personal AI that knows their life, understands their goals, and does the work for them.
Not a chatbot. Not a search… pic.twitter.com/OXQ5kJ9Hsx
— Guillermo Flor (@guilleflorvs) September 27, 2026
“>
மேலும், AI தொழில்நுட்பச் சேவைகள் காலப்போக்கில் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக மாறும் என்றும், டெக்சாஸில் 14 பில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் அமைக்கும் பணிகளில் மெட்டா ஈடுபட்டுள்ளதாகவும் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
