அமெரிக்காவில் இருந்து வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வது பற்றி 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங்லிங் பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், சீனா அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருட்களின் கொள்முதல் அளவை அதிகாப்பதற்கு எப்போதும் திறந்த மனப்பான்மையுடன் உள்ளது. ஆனால், 3000 கோடிக்கு 3000 கோடி என்ற சமமான வரிக் குறைப்பு ஏற்பாடு நடைமுறைக்கு வருவது அதற்கான முன்நிபந்தனையாகும். அமெரிக்கா சீனாவுடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, சுங்கவரியைக் கூட்டாகக் குறைப்பது, சந்தை நுழைவை விரிவாக்குவது முதலிய வழிமுறைகளின் மூலம், இரு நாட்டு வேளாண் பொருட்களின் வர்த்தகத்துக்கு மேலதிக பயனுள்ள நிபந்தனைகளை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.
