இவ்வாண்டு இலையுதிர்காலத் தானியங்களின் அறுவடையை உறுதி செய்துள்ளதாக சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் 4-ஆம் தேதி தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு கோடைக்காலத் தானியங்களின் விளைச்சல் 15 கோடியே 7 இலட்சத்து 45 ஆயிரம் டன்னாகும். இது வரலாற்றில் மிக அதிகப் பதிவாகியுள்ளது. முற்போக நெல்லின் விளைச்சல் 2 கோடியே 82 இலட்சத்து 90 ஆயிரம் டன்னாகும். மேலும் இவ்வாண்டின் மொத்த தானிய விளைச்சல் தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக 70 கோடி டன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
