ஈரான் மீதான தாக்குதலை அற்புதமான வெற்றி என டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரை  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில், மூன்று முக்கிய ஈரானிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களின் வெற்றியை அறிவித்தார்.
ஒரு சுருக்கமான தனது உரையில், டிரம்ப் இந்த நடவடிக்கையை அற்புதமான ராணுவ வெற்றி என்று விவரித்து, இது ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறன்களை அழித்துவிட்டது என்று கூறினார்.

You May Also Like

More From Author