சி.எம்.ஜி மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி மே 25ஆம் நாள், ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நிறைவடைந்தது.
இது உலகளவில் நடைபெற்ற முதலாவது மனித உருவ ரோபோ சண்டைப் போட்டியாகும் மற்றும் பொது மக்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்ட அறிவியல் பரவல் போட்டியாகவும் விளங்குகிறது.
இப்போட்டி, சி.எம்.ஜியின் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மேடைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம், அறிவியல் தொழில் நுட்பம் மக்களின் வாழ்க்கைக்குக் கொண்டு வரும் மாற்றங்களை உலகளவில் பார்வையாளர்கள் மிகவும் அருகில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.