கசாக்ஸ்தானில் நடைபெற்ற சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு வளர்ச்சி மன்றக் கூட்டம்

சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு வளர்ச்சி மன்றக் கூட்டம் மற்றும் 3ஆவது பட்டுப்பாதை சர்வதேச தகவல் தொடர்பு மாநாடு ஜூன் 22ஆம் நாள் கசாக்ஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்றது.

சீனா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த செய்தி ஊடகம், சிந்தனை கிடங்கு, பண்பாடு மற்றும் தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் என 240 பேர், பட்டுப்பாதை ஒத்துழைப்பை ஆழமாக்குவது முதலியவை குறித்து விவாதித்தனர்.

சிங்ஹுவா செய்தி நிறுவனத்தின் தலைவர் ஃபு ஹுவா துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பின் வளர்ச்சியில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெரும் கவனம் செலுத்தியுள்ளார்.

நிலைத்தன்மை, செழுமை, இணக்கம், ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் மத்திய ஆசியா, முழு உலகத்தைப் பொருத்த வரை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author