2026இல் 2வது தொகுதி முக்கிய திட்டப்பணிகள் வெளியீடு

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தகவலின்படி, 2026ம் ஆண்டின் 2வது தொகுதி முக்கிய கட்டுமானத் திட்டப்பணிகளின் பெயர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதிலுள்ள 336 முக்கிய திட்டப்பணிகளுக்கு 21 ஆயிரத்து 680 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு, நகரின் நிலத்தடி குழாய் அமைப்பின் சீரமைப்பு, யாங்சி ஆற்றின் பொருளாதார மண்டலத்தின் போக்குவரத்து வசதிகள், உயர் வரையறை வயல்கள், உயர்நிலை கல்வி மேம்பாடு, மூன்று வடக்கு பகுதிகளில் காட்டுப் பாதுகாப்பு திட்டம் முதலிய துறைகள் இப்பெயர் பட்டியலில் இடம்பெறுகின்றன. இதுவரை முழு ஆண்டுக்கான 80 ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீட்டில் 76 சதவீத நிதி, விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author