ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்க சாட் ஜிபிடி உதவியது குறித்த இந்திய மென்பொறியாளரின் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2023-ல் மென்பொறியாளர் ஒருவர் டெல்லியில் உள்ள ஒரு உயர்மட்ட நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்பை முடித்துப் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் அது நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், நாளடைவில் தனது வேலைக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதை அவர் உணர்ந்துள்ளார்.
தான் அந்த நிறுவனத்திலேயே தேங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்த மென்பொறியாளர், ஒருகட்டத்தில் தீவிரமாக வேறு வேலையைத் தொடங்கியுள்ளார்.
இருப்பினும், வேலை தேடும் படலம் அவர் நினைத்ததை போல அவ்வளவு சுலபமாக இல்லை. இதனால் 9 மாதங்களாகச் சாட் ஜிபிடி உதவியுடன் ரெஸ்யூம்களை வடிவமைத்துப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் தனது கோடிங் திறமையையும் மெருகேற்றியுள்ளார். இறுதியில் அமெரிக்க நிறுவனமொன்றில் அவருக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி உதவியில் மென்பொறியாளருக்கு வேலை கிடைத்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
