அடுத்த மாதம் ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி

Estimated read time 1 min read

சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மே 15 முதல் மே 20 வரை நடைபெறவுள்ள இந்தப் பயணம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் நெதர்லாந்து நாட்டுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் செமிகண்டக்டர் கனவை நனவாக்க, டச்சு நிறுவனமான ASML உடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்நிறுவனம் இந்தியாவில் தனது ஆதரவு அலுவலகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author