மிலானோ கோர்டினா நிதியத்துடன் ஒத்துழைப்பு உடன்பாட்டை எட்டிய சீன ஊடகக் குழுமம்

Estimated read time 1 min read

 

சீன ஊடகக் குழுமத்திற்கும் 2026 மிலானோ கோர்டினா நிதியத்திற்கும் இடையே ஜுன் 23ஆம் நாளன்று ஸ்விட்சர்லாந்தின் லொசேன் நகரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் படி, 2026ஆம் ஆண்டு மிலானோ குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விளம்பரம், போட்டிகள் ஒளிபரப்பு, பணியாளர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இரு தரப்பும் உடன்படிக்கையை எட்டியுள்ளன. அத்துடன், 2026ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஒளிபரப்பும் அங்கீகாரம் பெறும் நிறுவனமாக, சீன ஊடகக் குழுமம அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைசியோங், 2026ஆம் ஆண்டு மிலானோ-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கான ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவர் ஜியோவான்னி மலகோ ஆகியோர் இரு தரப்பின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

You May Also Like

More From Author