இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு இடம்பெயர எலான் மஸ்க் திட்டம்  

Estimated read time 1 min read

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எலான் மஸ்க் தனது வாழ்நாள் இலக்கான செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கத்தோடு தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஒரு வருடமாக, அங்கு சென்றால் என்ன நடக்கும் என்ற வேலைகளையும் அவர் முடுக்கிவிட்டுள்ளார்.
53 வயதான எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் அமைக்கப்படும் நகரத்தின் வடிவமைப்பு மற்றும் விவரங்களைத் ஆராயுமாறு SpaceX ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தி நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும், செவ்வாய் கிரகத்தில் அமைக்கப்பட இருக்கும் குவிமாட வாழ்விடங்களுக்கான திட்டங்களை வரைய அவர் ஒரு குழுவை நியமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு ஏற்ற விண்வெளி உடைகளை உருவாக்க இன்னொரு குழு பணியாற்றி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author