சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்வோம்: பிலவால் பூட்டோ  

Estimated read time 1 min read

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ் பாகிஸ்தானுக்கு உரிய தண்ணீரை தர மறுத்தால் போர் ஏற்படும் என்று கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 1960 இல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து அடிக்கடி இதைக் கூறி வரும் பிலவால் பூட்டோ, தற்போது மீண்டும் கூறியுள்ளார்.
எனினும், இந்த ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தார்.

You May Also Like

More From Author