பார்சி புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாரசீக மொழியில், ‘நவ்’ என்றால் புதியது, ‘ரோஸ்’ என்றால் ‘நாள்’ அதாவது ‘புதிய நாள்’ என அர்த்தம்.
பார்சி புத்தாண்டை கொண்டாடும் இந்த பாரம்பரியம் கடந்த 3,000 ஆண்டுகளாக ஈரானியர்கள் மற்றும் ஜோராஸ்டியன் ஆகியோரால் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பார்சி புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நவ்ரோஸ் முபாரக்! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
வரும் ஆண்டில் வெற்றி, வளர்ச்சி மற்றும் நமது சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேம்படுத்தட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.