துளிப்பா : கவிஞர் இரா.ரவி
ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு
குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு
நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் தடு
வான மண்டலத்தில் ஓசோன் ஊட்டை மூடு
தோள் கொடுப்போம்,வெப்பமயமாதலை உடன் தடு
கண்ணே மணியே மானே தேனே
கண்டபடி புகழ்வான் மயங்காதே பெண்ணே
கண் சிமிட்டி அழைப்பான் உன்னை
கன்னியே சபலப்பட்டு விடாதே நீ
கண்ணி வைத்து பிடித்திடப் பார்ப்பானே.
ஆற்று நீரில் நடக்குது அரசியல்
தேற்றுவார் இன்றி சோகத்தில் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் திண்டாட்டங்கள்
மூன்று போகம் கண்ட நிலங்கள்
நாற்று நடும் நிலங்கள் வறட்சியில்
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று
ஆண் என்ற ஆணவம் வளர்த்தனர் அன்று
பெண் என்றால் மட்டம் என்பது மடத்தனம்
நான் ஆண் என்ற அகந்தை வந்தது இன்று
ஏன்? இந்த வேறுபாடு சமமாக மதித்திடு நன்று.
ஓடி ஓடி உழைத்துத் தேய்ந்த போதும்
தேடித் தேடி நாளும் அலைந்திட்ட போதும்
நாடி உள்ள குடும்பத்தில் என்றும் பஞ்சம்
வாடி வதங்குகின்றான் உழைப்பாளி நாளும்
விடியல் விளையோதோ? ஏன்ற ஏக்கம்
கோடிஸ்வரன் மேலும் கோடிஸ்வரன் ஆகிறான்
ஏழை மேலும் ஏழை ஆகின்றான்
கேடி எல்லாம் அரசியல்வாதி ஆகின்றான்
நாட்டு நடப்பு நெஞ்சு பொறுக்கவில்லை
பாடிப் பயனில்லை நிலை
மாற வேண்டும் என்கிறேன்
—
.