சீன, சிங்கப்பூர் தலைமையமைச்சர்களின் சந்திப்பு

Estimated read time 1 min read

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 23ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மா மண்டபத்தில் சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்து பேசினார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீனாவும் சிங்கப்பூரும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும், முக்கிய கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன என்று தெரிவித்தார். இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவுக்கான நிகழ்வுகளை இரு தரப்பும் செவ்வனே நடத்தி, கல்வி, பண்பாடு, சுற்றுலா, செய்தி ஊடகம் உள்ளிட்ட துறைகளிலான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இரு நாட்டு நட்பார்ந்த ஒத்துழைப்புக்கான மக்களின் விருப்பத்தை தொடர்ந்து அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

லாரன்ஸ் வோங் கூறுகையில், சிங்கப்பூர்-சீன உறவு, ஒன்றுக்கொன்று மதிப்பு, புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அளிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சீனாவுடன் இணைந்து பிராந்தியம் மற்றும் பலதரப்பு மேடைகளில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தாராள வர்த்தகம் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிகாக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இச்சந்திப்புக்கு பிறகு, அவர்களின் சாட்சியுடன் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பது, அறிவு சார் சொத்துரிமை, மூன்று தரப்புடனான ஒத்துழைப்பு முதலிய பல ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு தரப்பும் கையொப்பமிட்டன.

 

You May Also Like

More From Author