பொருளாதாரம் குறித்த ஷிச்சின்பிங்கின் கட்டுரைகளின் முதலாவது தொகுதி சமீபத்தில் சீனா முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இது வரை, ஷிச்சின்பிங் தலைமையிலான கட்சி மத்திய கமிட்டி ஒரு தொகுதி புதிய கருத்துருக்கள், சிந்தனைகள், நெடுநோக்குத் திட்டங்கள் முதலியவற்றை முன்வைத்து, பொருளாதாரத் துறையில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த சாதனைகளை படைத்துள்ளது. அதோடு, ஷிச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை உருவாகியது.
பொருளாதாரம் பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரைகளின் முதலாவது தொகுதியில், 2012ஆம் ஆண்டின் நவம்பர் முதல் 2024ஆம் ஆண்டின் டிசம்பர் வரையான காலத்தில், பொருளாதாரக் கட்டுமானத்திற்கான அவரது மிக முக்கிய கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.