லத்தீன் அமெரிக்க நாடுகளில் வர்த்தக மற்றும் பொருளாதார முதலீடு செய்யும்போது, புவிசார் அரசியல் போட்டியிலும், செல்வாக்கு மண்டலம் (sphere of influence) என்ற நடவடிக்கையிலும் சீனா ஈடுபடவில்லை. இரு தரப்புகளுக்கிடையே வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் 18-ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவும் அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவில் நடத்தும் போட்டி தீவிரமாகி வரும் சூழ்நிலையில், அமெரிக்காவின் தலைமையில், அமெரிக்காவின் விழுமியங்களை ஏற்க கூடிய முதலீட்டுத் திட்டத்தை, சீனாவின் திட்டத்துக்கு ஈடாக அமெரிக்க அரசு வெளியிட வேண்டும் என்று அண்மையில் சில அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்து கூறிய குவோ ஜியாகுன், உலக தென் பகுதி நாடுகளைச் சேர்ந்த சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகள், பலதுறைகளில் ஒத்த நிலைப்பாடுகளைக் கொண்டு, ஒன்று மற்றதன் மேம்பாட்டை அதிகமாக நிறைவு செய்யலாம். விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு, நன்மைகளின் பகிர்வு ஆகிய கோட்பாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரு தரப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்புகள் லத்தீன் அமெரிக்க மக்களுக்கிடையே பரந்த ஆதரவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.