அதிரடியாக சரிந்த தங்கம் விலை..

Estimated read time 0 min read

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கம் விலை கண்டிருக்கும் ஏற்றம் தலையைச் சுற்றவைக்கிறது. மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை அவ்வப்போது சற்று குறைவது போல போக்கு காட்டி வருகிறது. மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.73,880க்கு விற்பனையானது.

தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ. 9,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120க்கு விற்பனையாகிறது.

You May Also Like

More From Author