அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்தார்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் இன்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author