நேட்டோ அவசரமாக விரிவாகி, உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்து வேற்றுமையை அதிகரித்துள்ளது. நேட்டோ உச்சிமாநாட்டில் ஐரோப்பாவின் பொது பாதுகாப்பு கருத்துகள் முறியடிக்கப்பட்டு, 5 விழுக்காட்டு இராணுவ செலவினங்கள் குறித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடையில் பரஸ்பர நம்பிக்கை குறைந்து, நேட்டோ பிரச்சினை குறித்து ஐரோப்பிய நாடுகள் கடும் கருத்துவேற்றுமைகளை கண்டுள்ளது. மேற்கூறிய காரணிகளால், இரு தரப்புகளுக்கிடையில் தற்போதைய நிலைமை தேக்க நிலையில் உள்ளது. சி.எம்.ஜியின் சி.ஜி.டி.என் கருத்துக் கணிப்பின்படி, நேட்டோவின் இராணுவ விரிவாக்கத்தினால், புதிய சுற்று இராணுவப் படைகலப் போட்டி நடைபெறும் சாத்தியம் அதிகரித்து, உலகின் அமைதி மற்றும் நிதானத்திற்குக் கடும் அச்சுறுதலைக் கொண்டு வரும் என்று 67.4 விழுக்காட்டினர் கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்புடைய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில், உலகளவில் ராணுவ செலவினங்கள் 2 இலட்சத்து 72 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதில், நேட்டோவின் செலவினங்கள் 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக, உலகின் மொத்த அளவில் 55 விழுக்காட்டைத் தாண்டுவது என்பது நேட்டோவின் அவசர விரிவாக்கத்திற்கு வலிமையான சான்றாக விளங்குகிறது குறிப்பிடத்தக்கது.