சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப் பணியகத்தின் தகவலின்படி, ஜனவரி 21ஆம் நாள் சென்சோ 19 விண்கலத்தின் மூன்று விண்வெளி வீரர்கள் நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொண்டு, விண்வெளி நிலையத்தின் வெளி பிரக்மெண்ட் தடுப்பு வசதிகளைப் பொருத்துதல், விண்கலத்துக்கு வெளியிலுள்ள வசதிகளின் சோதனை முதலிய கடமைகளை நிறைவேற்றினர்.
விண்வெளி வீரர்களான ட்செய் சூச்சேவும் சுங் லிங்துங்கும் வென் தியன் எனும் ஆய்வு கலத்துக்குப் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். விண்கலத்திலிருந்து வெளியே வந்து மேற்கொள்ளும் பணி இனிதே நிறைவடைந்தது.