சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவிற்கு வருகை தந்துள்ள ஸ்பெயின் மன்னர் பெலிப்பே VI ஐ சந்தித்து பேசினார்.
மேலும் ஷச்சின்பிங் சந்திப்பில் கூறுகையில்,
சீனாவும் ஸ்பெயினும் பண்பாட்டு ரீதியாக நீண்ட வரலாறு உடையன. இரு நாடுகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50 ஆண்டுகளில், நெடுநோக்கு பார்வையில், இரு தரப்புறவை கருத்தில் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, ஒன்றுடன் ஒன்று சாதனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன. வேறுபட்ட வரலாறு, பண்பாடு மற்றும் சமூக அமைப்புமுறை கொண்ட நாடுகளுக்கிடையில் நட்பார்ந்த, கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் முன்மாதிரியை உருவாக்க இரு நாடுகளும் பாடுபட்டு வருகின்றன. தவிரவும், உலகளாவிய திறப்பு மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, சர்வதேச நியாயத்தைப் பேணிக்காப்பதில் இரு தரப்பும் முக்கிய பங்காற்றியுள்ளன. ஸ்பெயின் ரோயல் குடும்பம், இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியுள்ளது. இரு நாடுகளின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மன்னர் சீனாவுக்கு வருகை தந்துள்ளது. இரு நாடுகளின் நட்பார்ந்த ஒத்துழைப்பை மேலும் வளர்க்கவும் விரைவுபடுத்தவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றார்.
