ஒகேனக்கல் : நீர்வரத்து விநாடிக்கு 43,000 கன அடியாக குறைந்தது!

Estimated read time 0 min read

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து விநாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது அங்கு கனமழை குறைந்துள்ளதால், ஒகேனக்கலுக்கான நீர்வரத்து விநாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்லவும் 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author