சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, டிசம்பர் 28ஆம் நாள், சீனாவின் யுன்னான் மாநிலத்தின் யூசி நகரில், கம்போடிய துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான ப்ராக் சோகுங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங் யீ கூறுகையில்,
கம்போடியா-தாய்லந்து எல்லை பகுதியின் நெருக்கமான நிலைமையில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை நனவாக்குவதற்கு சீனா பாடுபட்டு வருகின்றது. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இருதரப்பும் போர் நிறுத்தத்தை எட்டியுள்ளன. இதற்கு சீனா வரவேற்பு தெரிவிக்கிறது. இரு நாட்டு மக்களின் விருப்பத்திற்கும், இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு நாடுகளின் எதிர்பார்ப்புக்கும் இது பொருந்தியது. பல்வேறு தரப்புகள் இதற்கு ஆதரவு அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
