தெற்காசிய நாடுகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளை பகிரும் சீனா:இலங்கை அமைச்சர் சிறப்பு பேட்டி
9ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சிக்காக சீனாவுக்கு வருகை தந்த இலங்கை வர்த்தகம், வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் வசந்த சமரசிங்க கொழும்புக்குத் திரும்பிய பின் சீன சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனா தனது புதிய வளர்ச்சி வாய்ப்புகளை தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு, பரஸ்பர நலன்களை தரும் கூட்டு வெற்றி என்ற நோக்கிற்காக அர்ப்பணித்து வருகின்றது என்று தெரிவித்தார்.
நடப்பு பொருட்காட்சியின் தலைமை விருந்தினர் நாடான இலங்கை, சீனாவுடனான ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதோடு, இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவை ஆழப்படுத்துவதை எதிர்பார்க்கின்து என்று அவர் தெரிவித்தார்.
தவிர, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சீனா-இலங்கை இடையே கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக குழுவின் 8ஆவது கூட்டத்தையும் பற்றியும், இக்கூட்டத்துக்குப் பின் தொழிற்துறை மற்றும் விநியோக சங்கிலிகள் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது பற்றியும் வசந்த சமரசிங்க பேட்டியின்போது குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், சீனாவின் தொழிற்துறை மற்றும் விநியோக சங்கிலிகளுடான தொடர்பை ஆழமாக்குவது என்பது, தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கை முக்கிய வளர்ச்சி வாய்ப்புளை உருவாக்க உதவும் என்று தெரிவித்தார்.