கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரைவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்..!

Estimated read time 1 min read

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் ஏற்கனவே பயனாளிகளாக இருக்கும் பெண்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். புதிதாக சேருவதற்கும் லட்சக்கணக்கான பெண்கள் தயாராக இருக்கின்றனர்.

அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணபிக்க அரசு மீண்டும் எப்போது வாய்ப்பு வழங்கும் என பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அப்படி காத்திருப்பவர்களுக்கு தான் இப்போது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்ப துறை அனைத்து திட்டங்களின் பயனாளிகளின் தரவுகளையும் ஆதார் அடிப்படையில் ஒருங்கிணைத்துள்ளது. ஒரு திட்டத்தில் பயனாளியாக இருப்பவர்கள் இனி இன்னொரு திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது. அது தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாக இருக்கிறது. மேலும், சரியான ஆவணங்களா என்பதும் இனி உறுதி செய்யப்படும்.

மேலே சொல்லப்பட்ட விதிமுறையின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகளின் தரவுகளும் சரிபார்க்கப்படும். அப்போது, ஒரு திட்டத்தில் பயனாளியாக இருப்பது கண்டுபிடிகப்பட்டால், இன்னொரு திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது என பயனாளிகளுக்கு தெரிவிக்கப்படும். மேலும், அரசு மாதம் மாதம் கொடுக்கப்படும் ரொக்கப்பணத்தையும் நிறுத்திவிடும். சரியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதே அரசின் முதன்மையான நோக்கம் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க காத்திருப்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு உள்ள அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அரசின் வேறு திட்டங்களில், அதாவது ஓய்வூதியம், வேலைவாய்ப்பற்றோர் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட இன்னப்பிற மாதம் ரொக்கப்பணம் வழங்கப்படும் திட்டங்களில் பயனாளிகளாக இருக்கக்கூடாது.

தொழில் கடன் பெற வருமான வரி கணக்கு தாக்கல் செய்து அரசின் வேறு ஏதேனும் தொழில் கடன் திட்டங்கள் அல்லது வங்கிகளில் கடன் பெற்றிருந்தாலும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. இவை அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்பவர்களுக்கே இனி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். ஆதார் அடிப்படையில் அனைத்து தரவுகளையும் அரசு சரிபார்த்துவிடும் என்பதால், பெண்கள் கவனமுடன் இனி இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். மீறி விண்ணப்பித்தால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author