மத்திய உளவுத்துறையின் ACIO-II (Assistant Central Intelligence Officer Grade-II/Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். பணியிடங்களில், பொதுப்பிரிவுக்கு – 1,337, EWS – 442, OBC – 946, SC – 566, ST – 226 என ஒவ்வொரு சமூக பிரிவுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் இந்த பணிக்கான விண்ணப்பத்தில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கவிருப்போர் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டு தளர்வு, OBC பிரிவினருக்கு 3 ஆண்டு தளர்வு வழங்கப்படும். தேர்வாளர்கள் Tier-I, Tier-II எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.650 மற்றும் SC/ST, பெண்களுக்கு ரூ.550 மட்டும் ஆகும். விண்ணப்பிக்க இணையதளம்: https://www.mha.gov.in
நாளிதழ்களில் மட்டுமே தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு முழுமையாக படித்து, விதிமுறைகளை புரிந்துகொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.