சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் 7ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவின் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், கடந்த ஓராண்டு காலமாக சீன-இந்திய உறவு சீராக வளர்ந்துள்ளது. இரு தரப்புகளும் பல்வேறு நிலை பரிமாற்றங்களை மேற்கொண்டு, பயனுள்ள ஒத்துழைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி, ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற்றுள்ளன. சீனாவும் இந்தியாவும் மிகப் பெரிய அண்டை நாடுகளாகும். கூட்டு செழுமை அடைவதற்கு, இரு நாடுகள் கூட்டாளியாகச் செயல்பட்டு ஒத்துழைப்புகளை மேற்கொள்வது, ஒரே சரியான தேர்வாக இருக்கும் எனச் சீனத் தரப்பு எப்போதும் கருதுகிறது என்றார் அவர்.