ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ், இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அமைதி மற்றும் பன்முகத்தன்மை குறித்த உயர் மட்ட விவாதத்தில் பேசிய ஹரிஷ், பாகிஸ்தானை “IMF- இலிருந்து தொடர் கடன் வாங்குபவர் ” என்றும், “வெறித்தனம் மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு” என்றும் கூறினார்.
இந்தியாவின் முன்னேற்றத்தை பாகிஸ்தானின் நிலைமையுடன் வேறுபடுத்தி, இந்தியாவை “முதிர்ந்த ஜனநாயகம்” மற்றும் “வளர்ந்து வரும் பொருளாதாரம்” என்று அழைத்தார்.
ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
